காத்மாண்டு: பிரான்சில் மாக்ரோன் அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் போராட்டத்தில் குவிந்துள்ளனர். பிளாக் எவெரி திங்க் என்ற பிரச்சாரத்தை செயல்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதும் செய்யப்பட்டனர். நேபாளத்தை போலவே அரசுக்கு எதிராக பிரான்சிலும் கலவரம் வெடித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்த பிரான்சுவா பைரூ ராஜினாமா தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் 5வது பிரதமராக செபாஸ்டியன் நியூபோல்ட் கோ பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் நியமித்துள்ளார். பிரான்சுவா பைரூ தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியை அடைந்ததை அடுத்து பிரான்சுவா பைரூ பதிவை ராஜினாமா செய்தார்.
செபாஸ்டியன் நியூபோல்ட் கோ நியமித்ததை அடுத்து அனைத்தியும் தடுப்போம் அதாவது பிளாக் எவெரி திங்க் என்ற பிரச்சாரம் சமூக ஊடகங்கள் மூலம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் மற்றும் புதிய பிரதமருக்கு எதிராக தலைநகர் பிரான்சும் வேறு சில நகரங்களிலும் போராட்டங்கள் தீவிரம் அடைந்தன. ரைனோஸ் மற்றும் தென்மேற்கு பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பேருந்தில் தீவைத்து எரித்தனர்.அதோடு அங்கு இருக்கும் மின்கம்பியை சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மானுவேல் மாக்ரோன் ராஜினாமா கோரிக்கைகளும் இப்போது வலுப்பெற்று வருகின்றனர்.
புதன்கிழமை நிலவரப்படி நாடுமுழுவதும் சுமார் 80,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிரான்சில் அதிவேக ரயில்களும், மெட்ரோவும் செயல்பட்டன. லியோடில் போராட்டக்காரர்கள் ஒரு பிரதான சாலையை தடுத்து குப்பை தொட்டிகளுக்கு தீவைத்தனர். நான்குசில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கன்னி வெடிகுண்டுகளை பயன்படுத்தியதாக தெரிகிறது. போராட்டத்தை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.