காத்மாண்டு: நேபாள நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். GEN Z இளைஞர்களின் போராட்டத்தை அடுத்து பிரதமராக இருந்த சர்மா ஒலி ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம் சந்திரா பவுடலும் ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி அன்று சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய 7 நாட்கள் காலக்கெடு வழங்கியது நேபாள அரசு. அந்த கெடு முடிந்த நிலையில் தேதி அன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரையில் தடை நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தற்போது எக்ஸ், பேஸ்புக், யூடியூப் 26 சமூக வலைதளங்கள் பிரயானத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து GEN Z தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. நேபாள பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வீடுகளை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். இதனை அடுத்து பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார். பிரதமரை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம் சந்திரா பவுடலும் ராஜினாமா செய்தார். இதனால் நேபாளத்தில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது. இதனை தொடர்ந்து நேபாள நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.