நெல்லையப்பர் கோயில் யானை தொடர்பான வழக்கில் வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: நெல்லையப்பர் கோயில் யானை தொடர்பான வழக்கில் வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி என்ற பெண் யானை இருந்தது. அந்த யானை சமீபத்தில் உயிரிழந்தது. இதையடுத்து கோவிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும் என்று பக்தர்கள், பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை இணைந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து புதிய யானைக்குட்டி ஒன்றை வாங்கி வருவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் புதிய குட்டி யானையை கொண்டு வருவதற்கு தேர்வு செய்திருந்தனர். அந்த யானையை உத்தரகாண்டில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு வந்து அங்கிருந்து லாரி மூலம் நெல்லைக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில், நெல்லையப்பர் கோயிலுக்கு உத்தராகண்டில் இருந்து குட்டி யானையை கொண்டு வர தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. 4,000 கி.மீ தூரத்தில் இருந்து 5 வயது யானையை கொண்டு வர தடை விதிக்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோயில் யானை தொடர்பாக வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
