Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லை, வேலூர், தாம்பரம் டிஎஸ்பிக்கள் உள்பட 9 பேர் இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: நெல்லை, தாம்பரம், ராஜபாளையம், வேலூர் டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 9 காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை என குற்றச் சம்பவங்கள் நடந்தேறிய நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்து போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.

அதன்படி திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும், நெல்லை புறநகர் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக இருந்த பாலசுந்தரம் மதுரை-ஊமச்சிக்குளம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாகவும், தாம்பரம் காவல் ஆணையரக எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த இளஞ்செழியன், மணிமங்கலம் காவல் உதவி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம், ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி, வேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மணிமங்கலம் டிஎஸ்பி ராஜபாண்டியன் ஈரோடு சிவில் சப்ளைஸ் சிஐடியாகவும், நாகப்பட்டினம் டிஎஸ்பி சுபாஷ்சந்திரபோஸ் வேதாரண்யம் டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி-முசிறி டிஎஸ்பி யாஸ்மின் சென்னை போலீஸ் அகாடெமிக்கு மாற்றப்பட்டுள்ளார்.