நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பைக் பார்க்கிங் பிரச்னையில், இரண்டாம் ஆண்டு மாணவர் லட்சுமி நாராயணன்(18) தாக்கப்பட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் பேட்டை போலீசார் கொலை மிரட்டல், தாக்குதல் மற்றும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து 3 மாணவர்களை கைது செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் முதல் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை (செப்.1) திங்கள்கிழமை முதல் பல்கலைக்கழகம் மீண்டும் வழக்கம் போல் செயல்பட இருப்பதாக துணைவேந்தர் சந்திரசேகர் நேற்று தெரிவித்தார். எனவே இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு வரும் நாளை திங்கள்கிழமை வழக்கம் போல் மீண்டும் பல்கலைக்கழக வகுப்புகள் தொடங்க உள்ளன.
+
Advertisement