நெல்லையில் 2ஆம் வகுப்பு சிறுமியை குதறிய நாய்: சிறுமியின் முகத்தை தெருநாய் கடித்து குதறிய அதிரிச்சி சம்பவம்
திருநெல்வேலி: நெல்லையில் தெருநாய் கடித்து குதறியதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார் சிறுமி கிருத்திகா. இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது சிறுமியை தெருநாய் கடித்து குதறியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கபக்கத்தினர் சிறுமியை படுகாயத்துடன் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து சிறுமிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் முகத்தில் தெருநாய் கடித்து குதறிய அதிர்ச்சி சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அம்பாசமுத்திரத்தில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்து இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் தெருநாய் கடி சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில் பொதுமக்கள் அச்சம் அடைத்துள்ளனர்.