நெல்லை தொகுதியில் தோற்றால் திமுக நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
நெல்லை: நெல்லை தொகுதியில் தோற்றால் திமுக நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் உடன்பிறப்பே வா சந்திப்பின்போது நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்தார். உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
