நெல்லை: நெல்லையில் பூத் கமிட்டி மாநாட்டில் எடப்பாடி பெயரை உச்சரிக்காத உள்துறை அமைச்சர் அமித் ஷா. நெல்லையில் நடைபெற்று வரும் பாஜக நிகழ்ச்சியில் அமித்ஷா உரையாற்றினார். அதில், தமிழ் மண், மொழி மக்கள் மீது பற்று கொண்டவர் பிரதமர் மோடி. திருக்குறள் வழி நின்று பிரதமர் மோடி மக்களாட்சி செய்கிறார். தமிழுக்கு காசி சங்கமம் நிகழ்ச்சி பெருமை சேர்க்கிறது. திருக்குறளை பல்வேறு நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்தவர் பிரதமர் மோடி என அமித்ஷா தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா மீண்டும் உறுதிப்பட கூறியுள்ளார்.
+
Advertisement