Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நேரு குறித்து சர்ச்சை பேச்சு ராஜ்நாத்சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் ஆவேசம்

புதுடெல்லி: குஜராத் மாநிலம் வதோதரா அருகே பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,’நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி அயோத்தியில் பாபர் மசூதியை கட்ட விரும்பினார் ’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘ராஜ்நாத் சிங்கின் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பொய்யான தகவல்களை பேசி வரும் ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.