*கண்காணிப்பாளர் அறிவிப்பு
கிணத்துக்கடவு : நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராம கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் தங்கள் விளை பொருள்களை இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெகமம் ஒழுங்குமுறைவிற்பனை கூடத்தில் நாளை (9ம் தேதி) முதல், வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று, தேங்காய் மற்றும் கொப்பரை மறைமுக ஏலம் நடக்கிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
எனவே தேங்காய் மற்றும் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் அவற்றை தரம் பிரித்து நாளை (வியாழன்) காலை 9 மணிக்குள் கொண்டு வர வேண்டும்.வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்ட விளை பொருட்களுக்குரிய தொகையை உடனடியாக வழங்கப்படும்.
எனவே விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதில் கலந்து கொள்ளும் விவசாயிகள், ஆதார் கார்டு மற்றும் பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் ஆகியவற்றை விற்பனை கூட அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.