தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நான்குரோடு அருகே டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம், வாலிபர் ஒருவர் கழுத்தில் செத்து போன பாம்பை மாலையாக சுற்றிக்கொண்டு சரக்கு வாங்க வந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். அப்போது, டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள், உடனடியாக அங்கிருந்து செல்லும்படி, அந்த வாலிபரிடம் மது பாட்டிலை கொடுத்து அனுப்பி வைத்தனர். விசாரணையில், தர்மபுரி ராஜாபேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சூர்யா (27) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Advertisement