திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி: தேஜ கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகுவது ஏன் என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும். கூட்டணி குறித்து தெளிவாக இருக்கிறோம். எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் தெளிவாக அறிவிப்போம்.
அதுவரை மக்களை சந்திப்போம். ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம். செங்கோட்டையன் கெடு வைத்திருப்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். கருங்காலி கட்டையை விஜயகாந்த் வைத்திருந்தார். அதை எடுத்துவந்து கடவுள் காலடியில் வைத்து பிரார்த்தனை செய்து வீட்டுக்கு எடுத்துச் செல்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.