நவராத்திரி கர்பா விழாவில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: விஎச்பியின் கோரிக்கைக்கு ஒன்றிய அமைச்சர் அத்வாலே எதிர்ப்பு
மும்பை: இன்று தொடங்கும் நவராத்திரி விழாவில் பெண்கள் கர்பா நடனம் ஆடுவர்.இந்த நிகழ்ச்சியில் இந்துக்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று விஷ்வ இந்து பரிஷத்தின் தேசிய ஊடக தொடர்பாளர் ஸ்ரீராஜ் நாயர் தெரிவித்தார். அவர் கூறுகையில்,கர்பா வெறும் நடனம் அல்ல, பெண் தெய்வத்தை வணங்கும் ஒரு முறை. சிலை வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
விஎச்பி, பஜ்ரங்தள தொண்டர்கள் கர்பா நிகழ்ச்சிகளை கண்காணிப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு ஒன்றிய அமைச்சரும் இந்திய குடியரசு கட்சி(ஏ) தலைவருமான ராம்தாஸ் அத்வாலே கடும் எதிர்ப்புதெரிவித்தார். அத்வாலே கூறுகையில்,‘‘ கர்பா நிகழ்ச்சிக்கு யார் செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்ய விஷ்வ இந்து பரிஷத் யார்? இது, வன்முறையைத் தூண்டும் செயல்’’ என்றார்.