சென்னை: நவோதயா பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. kvsangathan.nic.in மற்றும் cbse.nic.in வலைதளங்கள் மூலமாக டிசம்பர் 4 வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு ஜனவரி, பிப்ரவரியில் கணினி வழியில் நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கான ஹால்டிக்கெட் டிசம்பரில் வெளியிடப்படும். நடப்பாண்டு புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
+
Advertisement


