Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இயற்கை அழகு!

*முட்டையின் வெள்ளைக்கரு பூண்டு, முல்தானி மிட்டி ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும்.

* வெள்ளரிக்காயை ‘சிப்ஸ்’ போல் நறுக்கி கண்ணின் கீழ் புறம் வைத்து வந்தால் கருவளையம் மறையும்.

*கால்களை அழகாக வைத்துக் கொள்ள கால்களுக்கும், பாதங்களுக்கும் வாரம் ஒரு முறை பாதாம் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

* தக்காளிப் பழத்தை நறுக்கி முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மெல்ல மறையும்.

* சதுரமான முகம் உள்ளவர்கள் புருவத்தின் நடுவில் சிறிது முடி விட்டு திரெட்டிங் செய்து கொண்டால் முகம் வட்டமாக காட்சியளிக்கும்.

*வெங்காயத்தை அரைத்து பருக்கள் மீது பூசினால் எரிச்சல் அடங்கும்.

* தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தைப் போட்டு வைத்து தினமும் அதை உபயோகித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

* கொண்டைக்கடலை மாவுடன் சிறிது பால் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு விட்டு முகத்தில் பூசிக் குளிக்க முகம் சிகப்பழகு பெறும்.

* விளக்கெண்ணெய், கிளிசரின், மெழுகு போன்றவற்றை கலந்து அவற்றை லேசாக சூடாக்கி பருக்கள் மேல் வைத்தால் பருக்கள் உதிர்ந்து விடும்.

*பொன்னாங்கன்னி கீரையை அடிக்கடி சூப் போட்டு குடித்து வாருங்கள். உங்கள் மேனி பளபளக்கும்.

*ஒரு வருடத்தில் சுமார் 200 முட்டைகளாவது ஒரு பெண் சாப்பிட வேண்டும். பட்ஜெட்டில் அழகு ரகசியம் இதுதான்.

*வெந்தயத்தை அரைத்து விழுதாக்கி பருக்கள் மேல் பூச பருக்கள் குறையும்.

*பசும்பாலை பஞ்சில் தொட்டு முகத்தை அவ்வப்போது துடைத்தால் முகம் பிரகாசமாகும்

*சரும அலர்ஜிகளுக்கு சிறிது கற்றாழை சாறை பூசி வர சீக்கிரம் பலன் கிடைக்கும்.

* ஹார்மோன் பருக்களுக்கு லவங்கப்பட்டை கலந்து கொதிக்க வைத்த நீர் பருக பலன் கிடைக்கும்.

- விமலா சடையப்பன்