Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இயற்கை பேரிடர்களால் 3 கோடி மக்கள் பாதிப்பு: தொடர்ந்து அதிகரிக்கும் அபாயம்: விழிப்புணர்வு நாளில் வேதனை

இயற்கையின் சீற்றத்தால் பூமியில் நிகழும் பொருட்சேதமும், உயிர்சேதமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி, புயல், வெள்ளப்பெருக்கு, வறட்சி, நிலச்சரிவு, பனிச்சரிவு, மின்னல் மற்றும் இடி தாக்குதல் போன்றவை இயற்ைக பேரிடர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இயந்திரமயமாகி விட்ட வாழ்க்கை சூழலில் நோய்களும், விபத்துகளும் மனிதர்களை பந்தாடி வருகிறது. இந்த நிலையில் இயற்கை பேரிடர்கள் என்பதும் அவ்வப்போது பெரும் அச்சுறுத்தலையும், அபாயங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஐக்கியநாடுகள் சபை சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் 13ம் தேதி சர்வதேச பேரிடர் கட்டுப்பாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பேரிடர் என்பது உலகளாவிய பெரும் அபாயமாக உருவெடுத்து வருகிறது. எனவே இது குறித்த பல்வேறு ஆய்வுகளும் நடந்து வருகிறது. இந்த ஆய்வுகளின் படி உலகில் நாள் தோறும் 1.5 என்ற முறையில் பேரிடர்கள் நிகழ்ந்து வருகின்றன. இது 2030ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 560 என்று மாறக்கூடிய அபாயம் உள்ளது. கடந்த 20ஆண்டுகளில் 350 முதல் 500வரையில் மிதமான பேரிடர்கள் ஆண்டு தோறும் நிகழ்ந்துள்ளது. காலநிலை மாற்றம் தான், இயற்கை பேரிடர்களை உருவாக்க முக்கிய காரணியாக உள்ளது. ஆனால் இதை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளும், விழிப்புணர்வும் மந்தகதியில் தான் உள்ளது என்பது இயற்கை சார்ந்த ஆய்வாளர்களின் கவலையாக உள்ளது.

இதுகுறித்து இயற்கை சார்ந்த மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: இயற்கை பேரிடர்களுக்கு அடித்தளமாக இருப்பது காலநிலை மாற்றம். காலநிலை மாற்றம் என்பது ஒரு அழுத்தம் நிறைந்த உலகளாவிய பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இது நமது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை உருவாக்குவதோடு, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் அபாயமாக மாறி வருகிறது. 1980ம் ஆண்டிலிருந்து தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிர்வெண் 40சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆதிகாலத்தில் இருந்தே இயற்கை பேரிடர்கள் பூமியில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. ஆனால் கடந்த 10ஆண்டுகளாக இதன் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது.ஒவ்வொரு நாளும் உலகின் ஏதோ ஒரு மூலையில் இயற்கை பேரிடர்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகள், திட்டமிடப்படாத வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் என்று இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. இவை நிகழ்த்தும் காலநிலை மாற்றங்கள் தான், இயற்கை பேரிடர்களுக்கு சமீபஆண்டுகளாக வழிவகுத்து வருகிறது. மனிதர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இயற்ைக ேபரழிவுகளால் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 3கோடி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் உயிரிழப்பு என்பது 15சதவீதமாக உள்ளது.

இயற்கை பேரிடர்கள் என்பது மனிதர்களின் உயிருக்கு மட்டும் உலை வைப்பதில்லை. பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிக்கிறது. கடந்த 20ஆண்டுகளில் உலகளவில் பேரிடர்கள் தொடர்பான பொருளாதார இழப்பின் மதிப்பு 3டிரில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை காஷ்மீர் வெள்ளப்பேரழிவு, உத்ரகாண்ட் நிலச்சரிவு, பெருங்கடல்சுனாமி, குஜராத் பூகம்பம், ஒடிசா புயல் என்று கடந்த 10ஆண்டுகளில் நாம் கண்ணால் கண்ட இயற்கை பேரழிவுகள் ஏராளம். இதில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன.

இது மட்டுமன்றி கல்வி, முன்னேற்றம், நம்பிக்கை, தொழில், குடும்பம் என்று அனைத்தையும் இயற்கை ேபரிடர்கள் சிதைத்து விடுகிறது. எனவே இயற்கையை சீரழிப்பதை தடுக்க அரசுகளும், அதற்கு துணையாக ஒவ்வொரு மனிதரும் கை கோர்க்க வேண்டும். அபாயம் இல்லாத பூமியை நமது தலைமுறைக்கு மட்டுமன்றி, பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்கும் கொண்டு ேசர்க்கும் வகையில் நமது செயல்கள் இருக்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

* 60% பேரழிவுகளுக்கு மனிதர்களே காரணம்

‘‘‘அழிவு என்பது அடிப்படையில் மனிதன் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதே முற்றிலும் உண்மை. நிலநடுக்கங்களின் மூலம் நகரங்களை அழிக்க வழிவகுப்பவன் மனிதன் தான். 1970ம் ஆண்டு முதல் 2021 வரை உலகளவில் 13 ஆயிரம் இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்துள்ளது. இதில் 7ஆயிரம் பேரிடர்கள் மனிதர்களால் தான் உருவாகியுள்ளது. நமது விருப்பப்படி பூமியை மாற்றியமைக்க முற்பட்டு வருவதே இதற்கு முக்கிய காரணம். இயற்கை எதிர்கொள்ளாத ஒன்றை நாம் வலுக்கட்டாயமாக உருவாக்கும் போது ‘சீரமைப்பு என்ற முயற்சி சீற்றம்’ என்று மாறுகிறது. மலைப்பகுதிகளில் வானுயர்ந்த கட்டிடங்கள், கடற்கரைகளில் பிரமாண்ட ஓய்வு இல்லங்கள், வனப்பகுதிகளில் அத்துமீறிய ஆக்கிரமிப்புகள் என்று இதை குறிப்பிடலாம். 2021ம் ஆண்டில் பேரழிவு நிகழ்வுகள் ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்தது. இந்த இறப்புகளில் 60 சதவீதத்திற்கு மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளே காரணம்’’ என்று ஆய்வுகள் தெரிவித்தது.

* இந்திய மக்கள் 29.02% பாதிப்பு

உலகில் ஏதாவது ஒரு பகுதியில் புயல், வெள்ளம், பூகம்பம், எரிமலை, சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம், எரிமலைவெடிப்பு, நிலச்சரிவு, பனிச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகள் தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது போல் தொடரும் பல்வேறு வகையான இயற்கை பேரழிவுகளால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் இயற்கை சீற்றங்களால் உலகளவில் 45,000 பேர் இறப்பை தழுவுகின்றனர். உலகளவில் இயற்ைக பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களில் நான்கில் ஒரு பங்கினர் (29.02சதவீதம்பேர்) இந்தியாவில் வாழ்கின்றனர் என்பதும் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள

தகவல்.

* இடர்கள் பலவிதம் நிலப்பகுதியில் சீற்றம் ஏற்பட்டால் நிலநடுக்கமாக தோன்றி பேரழிவை ஏற்படுத்துகிறது. நீர் சீற்றம் அடைவதால் வெள்ளப்பெருக்கெடுத்து பல்வேறு அபாயங்கள் உருவாகிறது. காற்று சீற்றம் அடைவதால் புயல் உருவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் மழையின்றி போனால் நிலப்பரப்பு எளிதாக வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்கிறது. புவியின் உட்பகுதியில் ஏற்படும் வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக எரிமலை தீக்குழம்புகள் மேலெழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மழைக்காலங்களில் தோன்றும் இடி, மின்னல் மற்றும் வெள்ளம் போன்றவை மனிதர்களுக்கு மட்டுமன்றி உயிரினங்களுக்கும், உடமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இப்படி இயற்கை மனிதர்களுக்கு தரும் பேரிடர்கள் மட்டுமன்றி, மனிதர்களால் இயற்கைக்கு நேரும் பேரிடர்களும் பெருகி வருகிறது என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.