புதுடெல்லி: சாலை விபத்துக்களை தடுப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, விஸ்வநாதன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ’’பொது இடங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் போன்ற மோட்டார் இல்லாத வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து மாநில அரசுகளும் 6 மாதத்தில் விதிகளை வகுக்க வேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் அல்லாத பிற சாலைகளுக்கான வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் தரநிலைகளைப் பராமரிப்பதற்கான விதிகளையும் 6 மாதத்தில் வகுக்க வேண்டும்’’ என கூறி உள்ளனர்.
+
Advertisement