Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 49 இன்ஜினியர்கள்

இந்திய தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள 49 இன்ஜினியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி:

1. இன்ஜினியர் (ஐடிஎஸ்): 49 இடங்கள் (பொது-21, ஒபிசி-13, எஸ்சி-7, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-5).

2. வயது: 21 லிருந்து 30க்குள்.

3. சம்பளம்: ரூ.40,000-1,40,000.

4. தகுதி: இன்பர்மேஷன் டெக்னாலஜி/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரிக்கல் இன்ஸ்ட்ருமென்டேஷன்/ டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கேட்-2025 தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

https://www.ihmcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.06.2025.