காட்டுமன்னார்கோவில் : தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அமமுக வெளியேறுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து டிடிவி தினகரனும், என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறினார். துரோகம் தலைவிரித்தாடுவதாகவும் காட்டுமன்னார்கோவிலில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் கூட்டணி தொடர்பான அமமுகவின் நிலைப்பாடு டிசம்பரில் அறிவிக்கப்படும் என டிடிவி தினகரன் கூறியிருந்தார். அமமுக தொண்டர்கள் விரும்பும் வகையில் எங்களின் கூட்டணி அமையும் என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார்
+
Advertisement