டெல்லி: தேசிய உயிரியல் பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் அவற்றை சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் சுரங்கங்கள் அமைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கோவாவுக்கு விதித்துள்ள தடையை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. உயிரியல் பூங்காக்களின் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் சுரங்கம் அமைப்பதால் வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் சரந்தா வட்டாரத்தை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
+
Advertisement
