சென்னை: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு வழக்கறிஞர்களை தேர்ந்தெடுக்க குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனை ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்ட மேற்படிப்பு நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வழக்கறிஞர்கள் நியமனம் என ஆணையம் அறிவித்திருந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிபந்தனையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சட்ட மேற்படிப்பு நுழைவுத்தேர்வு, படிப்பில் சேர்வதற்கான தேர்வு, அதை பணி நியமனத்துக்கு எடுக்க முடியாது என கூறி மனுதாரர் வாதங்களை ஏற்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா தலைமையிலான அமர்வு, நிபந்தனையை ரத்து செய்தது.
+
Advertisement