தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை தாபாக்கள் உள்ளது? அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்து அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை தாபாக்கள் உள்ளது? என்பதை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்து அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில் நவம்பர்.3ல் சாலை விபத்தில் 20 பேர், ராஜஸ்தானில் 18 பேர் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”
தேசிய நெடுஞ்சாலைகளில் உரிய அங்கீகாரம் இல்லாத தாபா உணவகங்களுக்குச் செல்லும் மக்கள், சாலையிலேயே வாகனங்களை நிறுத்திச் செல்வது பிற வாகனங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், விபத்து நேரிடுவதாகவும் தெரிவித்தனர். மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை தாபாக்கள் உள்ளது? என்பதை கணக்கிட்டு அறிக்கையாக தாக்கல் செய்ய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு தாபா உணவகங்களை அடையாளம் காண 2 வாரங்களுக்குள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.

