விமானத்தினுள் தேசியக்கொடி வண்ணத்தை ஒளிரச்செய்த ஆகாசா ஏர்: இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடவடிக்கை
ஐசிசி உலகக்கோப்பை மகளிர் இறுதி போட்டியின் போது இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஆகாசா ஏர் நிறுவனம் விமானங்களின் உட்புறங்களை மூவர்ண கொடி வண்ணங்களில் ஒளிர செய்தது. உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு கோப்பையுடன் சேர்த்து, இந்திய மதிப்பில் ரூ.39.83கோடி (தோராயமாக மதிப்பு) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.51 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
முதன்முதலாக இந்திய மகளிர் அணி வெற்றிக்கோப்பைபை தட்டியுள்ள நிலையில், இந்த மகளிர் உலக்கோப்பை வெற்றி மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அதிக ரன்கள் முதல், சதங்கள் வரை என பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பரிசுத்தொகையிலும் நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.அந்தவகையில், இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகநாட்டின் ஒற்றுமை உணர்வையும், இந்திய மகளிர் அணி மீதான பெருமையையும் பரப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆகாசா ஏர் தெரிவித்துள்ளது. பயணிகள் தங்கள் பயணத்தின்போது கிரிக்கெட் கொடிகளுடன் இணைந்திருக்க நிகழ்நேர ஸ்கோர்களை பகிர்ந்து கொள்ளும் முயற்சியை இந்த விமான நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது.
 
 
 
   