தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்குவோம் என மிரட்டி அடி பணிய வைக்க முடியாது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு காட்டம்!
சென்னை: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்குவோம் என மிரட்டி அடி பணிய வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு காட்டமாக பதில் அளித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய நிதியை தரவில்லை என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் 60%நிதியை ஒன்றிய அரசு தரவேண்டும். ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு தமிழ்நாடு அரசு அடிப்பணியாது என அரசு வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார்.