நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். காவலர் ஆறுமுகம் உயிரிழந்த துயரமான செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தேன். காவலர் உயிரிழந்தது காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. காவலரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி தேர்தல் ஆணைய அனுமதி பெற்று வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.