அழகிற்கு பின் ஆபத்து?.. நாடெங்கும் நானோ பனானா சாரி ட்ரெண்ட்; ஏஐ செயலியில் பெண்கள் படங்களை கொடுப்பது தவறு: காவல்துறை எச்சரிக்கை!!
பஞ்சாப்: ஏஐ தொழிநுட்ப உதவியுடன் விதவிதமாக சேலை அணிந்து, சமூக தளங்களில் பெண்கள் பதிவிடும் போக்கு தற்போது நாடெங்கும் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஆனால் இதன்பின் ஆபத்து இருக்கலாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாரம்பரிய சேலைகள், மாடன் உடைகள், பாலிவுட் ஸ்டைல் உடைகள், பண்டிகை கால உடைகள், பார்ட்டி உடைகள் என ஏஐ செயலி மூலம் தங்கள் படைத்தது பெண்கள் விதவிதமாக உருவாக்கி சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதில் உடை தவிர விருப்பப்படி முக பாவனைகள், கண்கவர் பின்னணி உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் சேர்க்க முடியும். அழகழகான இந்த படங்கள் பார்ப்போரை வெகுவாக கவர்கின்றன. இவற்றுக்கு லைக்குகள் மழை பொழிகிறது. நானோ பனானா ஏஐ என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற ஏஐ செயலியில் தங்கள் படத்தை கொடுப்பதால் அது பின்னால் தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டு சிக்கலை வரவழைக்க கூடும் என பஞ்சாப் மாநில காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.