Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நங்கநல்லூரில் அம்மன் கோயில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: சீரமைக்க வலியுறுத்தல்

ஆலந்தூர்: நங்கநல்லூரில் பிரசித்தி பெற்ற பனச்சியம்மன் கோயிலின் மேற்கூரை நேற்றிரவு திடீரென பெயர்ந்து விழுந்தது. அக்கோயிலின் அனைத்து பகுதிகளையும் உடனடியாக சீரமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நங்கநல்லூர், 4வது பிரதான சாலையில் பிரசித்தி பெற்ற, மிகப் பழமையான குளத்துடன் பனச்சியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஏராளமான சொத்துக்கள் மூலம் போதிய வருவாய் கிடைத்து வருகிறது. எனினும், இக்கோயிலில் இதுவரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புனரமைப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறுவதில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு பனச்சியம்மன் கோயிலின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதை பார்த்ததும் அங்கு சாமி கும்பிட்டு கொண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அதிர்ச்சியாகினர். எனினும், கோயிலின் மேற்கூரை யார்மீதும் விழவில்லை. இதனால் அங்கு உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. எனவே, தற்போது சிதிலமடைந்து காணப்படும் பனச்சியம்மன் திருக்கோயிலில் உடனடியாக புனரமைப்பு மற்றும் பழுதுபார்ப்பு, சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.