நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவி பிரேமாவுக்கு வீடு: தென்காசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
தென்காசி: தென்காசி மாவட்டம் ஈவிளக்குபுதூர் பகுதியில் அரசு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவே நெல்லை மாவட்டம் முக்கோடு பகுதியில் தங்கி இருந்தார். இன்று காலை 9 மணியளவில் தென்காசி மாவட்டத்தில் நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில் ஆலங்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அங்கிருந்த திமுக தொண்டர்கள் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடக்க கூடிய பகுதியிலிருக்கக்கூடிய ஈவிளக்குபுதூர் பகுதியில் வரக்கூடிய நேரத்தில் தென்காசி மாவட்டம் சீவநல்லூர் பகுதியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளானது ஒருலட்சத்து ஒன்றாவது பயனாளியான சுமதி என்பவருக்கு வீட்டை ஒப்படைக்கும் நிகழ்ச்சியானது இன்று நடைபெற உள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே சீவநல்லூர் பகுதியை சேர்ந்த சுமதி என்பவர் வீட்டிற்கு சென்று நேரடியாக இத்திட்டத்தில் தரமானதாக வீடுகள் கட்டப்பட்டுள்ளதா மற்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
சற்று நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு நிகழ்ச்சி நடைபெற கூடிய அரங்கிற்கு முதல்வர் வருகை தர உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ரூ.141 கோடி மதிப்பிலான 11 முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து ரூ.250 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.587.37 லட்சம் மதிப்பிலான நல திட்ட உதவிகளையும். பழங்குடியினர்நல துறை, வீட்டு வசதி வாரியம், ஊரக வளர்ச்சி துறையினர் 27 துறை சார்ந்த பயனாளிகளுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று முதல்வர் தென்காசி மாவட்ட மக்களுக்கு அர்பணிக்கிறார்.
