தமிழ்நாடு எனும் பெயர் நிலைத்திருக்கும் வரை சங்கரலிங்கனாரும் நன்றியோடு நினைவுகூரப்படுவார்: முதல்வர் டிவிட்
சென்னை: தமிழ்நாடு எனும் பெயர் நிலைத்திருக்கும் வரை சங்கரலிங்கனாரும் நன்றியோடு நினைவுகூரப்படுவார் என்று அவரது பிறந்த நாளில் முதல்வர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: விடுதலை போராட்ட வீரர், தமிழ்நாடு என்ற பெயரை நம் மாநிலம் பெறுவதற்காக 76 நாள் உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த வீரத்தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள்.
அவர் உறுதியாகப் போராடி உயிர்துறந்தும் நிறைவேறாத தமிழினத்தின் பெருங்கனவு, அண்ணா தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பின்னரே நனவானது. தமிழ்நாடு எனும் பெயர் இம்மண்ணில் நிலைத்திருக்கும் வரை சங்கரலிங்கனாரும் நன்றியோடு நினைவுகூரப்படுவார்.