நாமக்கல்: நாமக்கல் மோகனூர் சாலையில் வசித்துவருவபவர் வாங்கிலி சுப்புரமணியன். இவர் நாமக்கல், கிருஷ்ணகிரி பகுதிகளில் மிகபெரிய அளவில் கோழிப்பண்ணை நடத்திவருகிறார். அதுமட்டுமின்றி கோழித்தீவன ஆலைகளும் நடத்திவருகிறார். இவருக்கு சொந்தமான திருச்சி சாலையில் உள்ள அவரது அலுவலகம், மோகனூர் சாலையில் உள்ள அவரது வீடு, அலுவலகம், வெங்கடேஷ்வர நிதி நிறுவனம் உள்ளிட்ட 3 இடங்களில் சுமார் 10 கார்களில் வந்த 30 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர்.
இந்த சோதனையானது 2-வது நாளாக நடைபெற்றுவருகிறது. அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் கிடைத்த ஆவணங்களில் அடிப்படையில் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்றுவருகிறது.