சென்னை: நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜவில் பதவி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். தமிழக பாஜவில் 25 அணிகளுக்கு அமைப்பாளர்களை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜிக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டளது. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவுக்கு மாநில அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். நயினார் நாகேந்திரன் மகனுக்கு பதவி கொடுக்கப்பட்டது பேசுபொருளானது.
இந்த நிலையில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், ‘‘தமிழக பாஜவில் 25 பிரிவுகளில் நயினார் நாகேந்திரன் மகனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனுக்கு அடுத்த பொறுப்பில் அவர் இல்லையே. ஏற்கனவே அவர் அரசியல் அனுபவம் பெற்றதால் 23 பிரிவுகளில் ஒரு பிரிவாக இருக்கிறார். அணிகளின் பிரிவுகளில் தொண்டரோடு தொண்டராக பணியாற்ற போகிறார்’’ என்றார்.