நயினார் நாகேந்திரனின் மகன் அமைக்கவுள்ள புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு: கருத்துக் கேட்பு கூட்டத்தில் இரு தரப்பினரும் வாக்குவாதம்
தூத்துக்குடி: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி புதிதாக அமைக்கவுள்ள கல்குவாரிக்கு எதிப்பு தெரிவித்து சுற்றுசூழல் ஆர்வளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கருத்துக் கேட்பு கூட்டத்தில் சரசலப்பு ஏற்பட்டது. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட மூலக்கரை பஞ்சாயத்து பகுதியில் பல்வேறு கல்குவாரிகள் மற்றும் கிரஷர் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் கற்கள் மற்றும் சரல் மணல்கள் கனரக வாகனில் அதிக பாரத்தோடு கொண்டு செல்வதால் சாலைகள் சேதமடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இங்கு செயல்படும் கோரிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயி பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் நாயனார் பாலாஜி மூலக்கரை கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைக்க கடந்த 2021ஆம் ஆண்டு விண்ணப்பித்து அதற்கான துறை ரீதியான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், இங்கு பேட்மா நகரத்தில் கருத்து கேட்பு கூட்டம் பொதுமக்களிடம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோரிக்கு ஆதரவாக வேலைவாய்ப்புக்காக எங்களது பகுதியில் கால்கோரி அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு தரப்பினர் இந்த கோரிகளால் எங்களுக்கு பாதிப்புகள், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தெரிவித்த நிலையில், சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகில் பேசுகையில் இந்த கோரிக்கை வந்து விதிமீறி செயல்படுவதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என புகார் தெரிவித்தார். இந்த நிலையில், இவர் பேசவிடாமல் தடுத்து கோரிக்கைக்கு ஆதரவாக செயல்படுவர்கள் அவரது மைக்கிடம் அவரிடமிருந்து பரித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கோட்டாட்சியர் பிரபு அவர்கள் அனைவரையும் அமைதி படுத்தினர். இந்த நிலையில், திரைவிடம் போலீசாரின் பலத்த பாதுகாப்போடு கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கூட்டத்திலே எடுக்கப்பட்ட முடிவு சுற்றுசூழல் துறைக்கு அனுமதிக்கப்பட்டு அவர்களது முடிவு பின்னாடி மீண்டும் செயல்பாடு தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சுற்றுசூழல் ஆர்வம் மைக் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.