நாகர்கோவில் அருகே பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் அடைந்த 13 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் அடைந்த 13 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் விஷ்ணு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பட்டாசுகளை கொளுத்த மண்ணெண்ணெய் விளக்கைக் கொடுத்த அவரின் உறவினரான சந்திராதேவி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
