நாகையில் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான மண்டபத்தின் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய த.வெ.க.வினர் மீது வழக்குப் பதிவு
நாகை: நாகையில் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான மண்டபத்தின் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய த.வெ.க.வினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் பிரச்சாரத்தின்போது மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் மீது த.வெ.க.வினர் அதிகளவில் ஏறியுள்ளனர். த.வெ.க.வினர் அதிகளவில் ஏறி அமர்ந்ததால் பாரம் தாங்காமல் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் விழுந்தது. நிபந்தனைகளை மீறி தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக த.வெ.க.வினர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.