Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு!!

நாகப்பட்டினம்: நாகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை சம்பா நெற்பயிர்களை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக குறுவை நெற்பயிர்கள் மட்டும்மில்லாமல் இடையில் போடப்பட்டிருந்த சம்பா இளம் பயிர்களும் நீரில் மூழ்கியது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக கனமழையானது ஓய்ந்து இருந்தாலும் குறுவை நெற்பயிர்கள் இருக்கக்கூடிய நிலப்பரப்பில் அதிக அளவிலான மழைநீர் தேங்கியிருப்பதால் விவசாயிகள் தங்களது பயிரை அறுவடை செய்யாமலும், மீட்டெடுக்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் நாகப்பட்டினம் திருமருகல், கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் கருவேலங்கடை பகுதியில் மூழ்கியிருந்த சம்பா நெற்பயிர்களை அமைச்சர் ஆய்வு செய்து விவசாயிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ச்சியாக சின்னத்துரை கிராமத்தில் ஆய்வு பணி மேற்கொண்டு வரும் அமைச்சர் திருவான்மியூர் கிராமத்தில் இருக்கக்கூடிய குறுவை சார்ந்த நெற்பயிர்கள் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.1லட்சத்து 20ஆயிரம் பரப்பளவில் நெல் சாகுபடி 20 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், கிட்டத்தட்ட மீதமுள்ள நெற்கதிர்களை மழையில் நனைந்த காப்பாற்ற முடியாமல் பல்வேறு கிராம விவசாயிகள் தவித்து வருகின்றனர். விவசாயிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் உரிய இழப்பீடு வழங்கப்படும். நிவாரண பெற்று தருவதாக அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரோடு தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் உள்ளிட்ட வேளாண்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு இருக்கிறார்கள். அடுத்தபடியாக நாகப்பட்டினம் முழுவதும் ஆய்வு மேர்கொள்ளப்படும்.