Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நபார்டு வங்கியில் 100 உதவி மேலாளர்கள்

பணியிடங்கள் விவரம்:

I. Assistant Manager (RDBS)

i) General: 50 இடங்கள் (பொது- 23, எஸ்சி-7, எஸ்டி-3, ஒபிசி-12, பொருளாதார பிற்பட்டோர்-5). தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம்.

ii) Chartered Accountant: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று ஐசிஏஐ அமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

iii) Finance: 7 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: பைனான்ஸ் பேங்கிங் பாடத்தில் இளநிலைப் பட்டம் அல்லது எம்பிஏ பைனான்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

iv) Human Resource Management: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் Personnel Management/Industrial Relations/HR/Labour Law ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம்.

v) Statistics: 2 இடங்கள் ( எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: புள்ளியியல்/கணிதம்/எக்னோமெட்ரிக்ஸ் பாடத்தில் இளநிலைப் பட்டம்.

vi) Computer/Information Technology/Agriculture/Animal Husbandry/Fisheries/ Food Processing/Forestry/Plantation & Horticulture/ Geo Informatics/Development Management/ Civil Engineering/Electrical Engineering/Environmental Engineering/Science: 35 இடங்கள் (பொது- 16, எஸ்சி-1, எஸ்டி-5, ஒபிசி-12, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.கல்வித்தகுதியில் எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவினர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்று பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2024 தேதியின்படி 21லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.44,500- 89,150.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.850/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.150 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஆன்லைனில் நடத்தப்படும் முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல் நிலை தேர்வு செப்டம்பரில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், ஈரோடு, விருதுநகர் ஆகிய மையங்களில் நடைபெறும். முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் பிரதான தேர்வுக்கு அழைக்கப்படுவர். பிரதான தேர்வு சென்னையில் நடைபெறும்.www.nabard.org/career என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.08.2024.