சென்னை: அதிமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு 30ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை, நந்தனம், அண்ணாசாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில், கட்சியினர் அனைவரும் கலந்துகொண்டுமரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement
