ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜா விழாவை ஓட்டி பசும்பொன்னில் உள்ள அவர் நினைவு இடத்தில் குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்கத் தேவருடைய 118வது குரு ஜெயந்தி விழாவும், 63வது குறுபூஜை விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தினங்களாகவே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் இதை மிகப்பெரிய விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்திகின்ற நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதற்காக நேற்று மதுரை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் தளத்திற்கு நேரடியாக வந்து இறங்கினார். அங்கு இருந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு வந்த பிறகு அவர் குடும்பத்தினர் அவருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் அவர் நினைவிடத்திற்கு அழைத்து வந்தனர். அவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்பு அவர் வாழ்ந்த நினைவிடத்திற்கு பின்புறம் இருக்கக்கூடிய தியான மண்டபத்தில் உள்ள புகைப்படத்திற்கும், முன்னோர்களுக்கும் அவர் மரியாதை செலுத்தினர். இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கிளம்பி மதுரை செல்ல இருக்கிறார்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். இந்த பகுதியில் கிட்டத்தட்ட 6,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளிலும். 350க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பசும்பொன் சுற்றி போடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து 33 இடங்களுக்கு மேலாக தடுப்புகள் அமைத்து மாவட்டம் முழுவதும் காவல் துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து அங்கு வரக்கூடிய கூட்டங்களை கண்காணிப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.
