Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முஸ்லிம் திருமண முறிவு சட்டத்தில் விவாகரத்து வழக்கு முடியும் வரை ஜீவனாம்சம் வழங்கலாம் :சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!

சென்னை :முஸ்லிம் திருமண முறிவு சட்டத்தில் விவாகரத்து வழக்கு முடியும் வரை மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என தனி பிரிவு சரத்து இல்லாவிட்டாலும், அரசியலமைப்பு உரிமையின்படி மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதகையைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் விவாகரத்து கோரி, ஊட்டி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இடைக்கால ஜீவனாம்சம் வழங்க கோரி அப்பெண் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், மாதம் 30 ஆயிரம் ரூபாய் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்க கணவருக்கு உத்தரவிட்டது.

குடும்ப நல நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அப்பெண்ணின் கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன், முஸ்லிம் திருமண முறிவு சட்டத்தில் விவாகரத்து வழக்கு முடியும் வரை ஜீவனாம்சம் வழங்குவதற்கு உரிய பிரிவுகள் இல்லை என்றாலும், அரசியலமைப்பு அளித்துள்ள உரிமையின் அடிப்படையில் மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்ற ஊட்டி குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவு சரிதான் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.