சென்னை: இசை அரசனுக்கு மட்டுமல்ல, இசை ரசிகர்களுக்குமான பாராட்டு விழா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 13ம் தேதி மாலை திரையுலகில் பொன் விழா காணும் சிம்பொனி சிகரம் தொட்ட இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டு விழா நடைபெற இருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: “ராஜாவை தாலாட்டும் தென்றல்” - நம் பாராட்டு விழா! இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை ரசிகர்களுக்குமான பாராட்டு விழா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
+
Advertisement