சென்னை: எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் 96வது தொடர் சென்னை எழும்பூர் ஹாக்கி அரங்கில் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி ஜூலை 10ம் தேதி தொடங்கியது. இப்போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியன் ரயில்வே - ஐஓசி அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து நடைபெற உள்ள 2வது அரையிறுதியில் இந்திய கப்பற்படை - இந்திய ராணுவம் ஆகியவை களம் காண இருக்கின்றன. இந்த 2 அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் நாளை மாலை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் தங்கக் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும்.
+
Advertisement