சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாடாளுமன்றத்தில் மக்களின் குரலை பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து போராடி வருகிற ஒருவரை மிரட்டுவது, ஜனநாயகத்தையே தாக்கும் செயல்
ஆகும்.
இத்தகைய மிரட்டல்கள் சட்டம்- ஒழுங்கை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அரசியல் கருத்து வேறுபாடுகளை ஜனநாயக ரீதியில் தீர்க்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கைக்கும் விரோதமாகும். தகவல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பாதுகாப்பாக தங்கள் பணிகளைச் செய்ய ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.