செய்யாத கொலைக்காக சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரை நாடு கடத்த வேண்டாம்: அமெரிக்க நீதிமன்றங்கள் உத்தரவு
பிலடெல்பியா: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த சுப்ரமணியம் வேதம் என்ற சுபு(60) இந்தியாவில் பிறந்தாலும், 9 மாத குழந்தையாக பெற்றோருடன் அமெரிக்கா சென்று விட்டார். இவர் கடந்த 1982ம் ஆண்டு தனது 19 வயதில், தன்னுடன் தங்கி இருந்த கல்லூரி நண்பர் தாமஸ் கின்சர் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், குற்றத்தை அவர் செய்யவில்லை என்பது தெரிந்ததும், 43 ஆண்டுக்கு பிறகு கடந்த 3ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அவர் விடுதலையான உடனேயே போதைப்பொருள் வழக்கை காரணம் கூறி, அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சுப்ரமணியம் வேதம் சுபு தற்போது இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட இருந்தார். இதை எதிர்த்து சுப்ரமணியம வேதத்தின் சகோதரி உள்ளிடடோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கில் சுப்ரமணியம் வேதத்தை நாடு கடத்த வேண்டாம் என அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளுக்கு இரண்டு நீதிமன்றங்கள் தனித்தனியாக உத்தரவிட்டுள்ளன.
