Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 மாநகராட்சிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி ஆகிய மாநகராட்சிகளின் எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப் பாட்டிலுள்ள சாலைகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளிலுள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (07.10.2024) கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய பயிற்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் அவர்களின் தொடக்கவுரையில் வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் என வானிலை மையம் அறிவுறுத்துள்ளது. வங்க கடலில் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுதால் தற்போது சில மாவட்டங்களிலும் சென்னையிலும் மழை பெய்து வருகிறது என்பதை குறிப்பிட்டு அமைச்சர் அவர்கள் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் எந்தெந்த பகுதிகளில் நிறைவடைந்துள்ளது என்பதை கேட்டறிந்தார்.

தற்போதுள்ள நிலையான அறிவுரைகளின்படி சிறுபாலங்கள், வடிநீர்கால்வாய்கள், நீழ்வழிப்பாதைகள் ஆகியவை எந்ததெந்த இடங்களின் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சுத்தம் செய்யப்படாத பகுதிகளை உடனே சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

பல்லாவரம்-துரைப்பாக்கம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையும் கிழக்கு கடற்கரை சாலையும் இணைக்கும் சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் மறைமலை அடிகளார் பாலம் இரும்புலியூர் வண்டலூர் முடிச்சூர் வாலாஜபாத் சாலை மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியில் நிறைவுற்ற பணிகள், எஞ்சியுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்து விரைவாக அனைத்துப் பணிகளையும் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களில் நான்கு பக்கமும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பருவ மழையின் போது சுரங்கப்பாதையில் (Subway) உள்ள இடங்களில் நீர்இறைக்கும் இயந்திரங்கள்,எரிபொருள், ஜெனரேட்டர் போன்ற உபகரணங்கள் உரிய பராமரிப்பு செய்து தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். என்றும் உடனடியாக தேவைப்படும் மின் மோட்டார், மற்றும் வாகனங்கள் (JCB, Lorry etc.,) போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

வெள்ள சேத தடுப்பு பணிகளுக்கு தேவைப்படும் மணல் மூட்டைகள், சவுக்கு கம்பங்கள் உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். என்றும் பொதுமக்களுக்கு எந்தவித அசௌகாரியங்களும் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

துறையிலுள்ள பணியாட்களை தவிர தேவைப்படும் இதர ஆட்களை ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். இயற்கை பேரிடர் காலங்களில் விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

அவசர காலங்களுக்கு உதவக் கூடிய ஒப்பந்ததாரர்களை கண்டறிந்து அவர்களின் தொலைப்பேசி எண்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். சேதம் பற்றிய விவரங்களை உடனடியாக தலைமையிடத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

பேரிடர் காலங்களில் உதவக் கூடிய மருத்துவ மனைகள், மற்றும் அவசர உதவி நிறுவனங்கள், உள்ள சாலைகளில் சிறப்பு கவனம் செலுத்தி நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

வடகிழக்கு பருவ மழை என்பது உறுதி செய்யப்பட்டது. மழையின் காரணமாக பொதுமக்களுக்கு நெடுஞ்சாலைத்துறையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.  தாம்பரம் சோமங்கலம் நந்தம்பாக்கம் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் சாலைகளில் நடைபெறும் பணிகள் குறித்து ஒன்றன்பின் ஒன்றாக ஆய்வு செய்து பொறியாளருக்கு தக்க அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆர்.செல்வராஜ், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை முகங்கள் துறை, ஆர்.செல்வதுரை, நெடுஞ்சாலைத்துறை, முதன்மை இயக்குநர், திரு.கே.ஜி.சத்தியபிரகாஷ், தலைமைப் பொறியாளர், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, எம். சரவணன், இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், S.பழனிவேல், தலைமைப் பொறியாளர், தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம், இரா.சந்திரசேகர், சிறப்பு அலுவலர் (தொழில் நுட்பம்), கண்காணிப்புப் பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் துறைச் சார்ந்த அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.