மும்பை: பிரிட்டன் பிரதமராக கேர் ஸ்டார்மர் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக இந்தியாவுக்கு நேற்று வந்தார். அவர், மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தன் அரசுமுறை பயணத்தை தொடங்கியுள்ளார். அவருடன் பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் என 125 பேர் அடங்கிய குழுவினரும் வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மும்பையில் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரிட்டன் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினர். மேலும் இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.