புதுடெல்லி: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தது. விமானத்தில் இரண்டு கரப்பான் பூச்சிகள் இருந்துள்ளன. இதனால் இரண்டு பயணிகள் அசவுகரியத்துக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து அவர்கள் உடனடியாக விமான ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு பயணிகள் இருக்கை மாற்றி அமரவைக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் கரப்பான் பூச்சி இருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்காக ஏர் இந்தியா மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து ஏர் இந்தியா நேற்று வெளியிட்ட அறிக்கையில், சுத்தம் செய்வதற்கான வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும் சில நேரங்களில் பூச்சிகள் நுழைந்துவிடுகின்றன. இதுபோன்று மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு ஏர் இந்தியா விரிவான விசாரணை மேற்கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
+
Advertisement