மும்பை: மும்பை போவாய் என்ற இடத்தில் பட்டப் பகலில் கடத்தப்பட்ட 17 குழந்தைகளை போலீசார் பத்திரமாக மீட்டனர். குழந்தைகள் கடத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். கடத்தல் நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி 17 குழந்தைகளையும் காவல்துறை பத்திரமாக மீட்டது. குழந்தைகளை கடத்திச் சென்று ஸ்டூடியோ ஒன்றில் சிறை வைத்திருந்த ரோஹித் ஆர்யா என்பவர் கைது செய்யப்பட்டார்.
+
Advertisement
