மும்பை: மும்பை போவாய் என்ற இடத்தில் பட்டப் பகலில் 17 குழந்தைகள் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை பவாய் என்ற பகுதியில் உள்ள ஆர்.ஏ.ஸ்டுடியோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 17 குழந்தைகளை பிணை கைதிகளாக கடத்தி உள்ளார். குழந்தைகள் கடத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். கடத்தல் நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி 17 குழந்தைகளை மீட்டு, சம்பந்தப்பட்ட நபரை காவல்துறை கைது செய்தது.குழந்தைகளை கடத்திய அந்த நபர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து குழந்தைகளை கடத்திச் சென்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மும்பை போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. குழந்தைகளை கடத்திச் சென்று ஸ்டூடியோ ஒன்றில் சிறை வைத்திருந்த நடிப்பு பயிற்சி மையத்தின் ஊழியரான ரோஹித் ஆர்யா என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தெரிவதாக போலீஸ் தெரிவித்துள்ளது. குழந்தைகளை கடத்திய அந்த நபர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
