மும்பை: 2025ம் ஆண்டிற்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 2025ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்களின் பட்டியலை ஹுருன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் முதலிடத்தில் உள்ளது. அவர்கள் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 9.55 லட்சம் கோடி ரூபாய் நிகரமதிப்புடன் இந்தியாவின் முதல் பணக்கார குடும்பமாகத் திகழ்கின்றனர். கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தொழிலதிபர் அதானி, இந்த ஆண்டு 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மற்றும்அவரது குடும்பத்தினர் சொத்து மதிப்பு 8.14 லட்சம் கோடி ரூபாய். 3வது இடத்தில் எச்சிஎல் டெக்னாலஜிஸின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ரூ.2.84 லட்சம் கோடியுடன் முதல்முறையாக 3ம் இடம் பிடித்துள்ளார். 4வது இடத்தில் சைரஸ் பூனாவாலா( ரூ.2.46 லட்சம் கோடி), 5வது இடத்தில் குமார் மங்களம் பிர்லா( ரூ.2.32 லட்சம் கோடி உள்ளார். இந்தியாவில் தற்போது 1687 பேர், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து வைத்துள்ளனர்.
டாப் 5 பட்டியல்
1. முகேஷ் அம்பானி ரூ.9,55,410 கோடி
2. அதானி ரூ.8,14,720 கோடி
3. ரோஷினி நாடார் ரூ.2,84,120 கோடி
4. சைரஸ் பூனாவாலா ரூ. 2,46,460 கோடி
5. குமார் மங்கலம் பிர்லா ரூ. 2,32,850 கோடி
* அங்க எலான் மஸ்க்..
போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் 499.5 பில்லியன் டாலர் மதிப்புடன்(ரூ.44 லட்சம் கோடி) முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் இருக்கும் ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் சொத்து மதிப்பு 351.5 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.31 லட்சம் கோடி) உள்ளது.