கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் அனைத்திந்திய புலிகள் கணக்கெடுப்பு-2026க்கான தென்மண்டல பயிற்சிகள் நடைபெற உள்ளதால் வரும் 23 முதல் 26ம் தேதி வரை 4 நாட்களுக்கு தெப்பக்காடு வரவேற்பு சரகம், யானைகளுக்கு உணவு அளிக்கும் முகாம் இயங்காது. வாகன சூழல் சுற்றுலா சவாரி, உள்ளிட்டவைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement